மற்றவர்களுக்கு ஒன்று.. புஜாராவுக்கு ஒன்றா? ஹர்பஜன் சிங் கேள்வி

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே புஜாரா நீக்கப்பட்டதற்கு அவர் பலிஆடாக மாற்றப்பட்டிருக்கிறார் என்று கவாஸ்கர் குற்றச்சாட்டை தெரிவித்தார்.

ஜுன் 25, 2023 - 11:40
மற்றவர்களுக்கு ஒன்று.. புஜாராவுக்கு ஒன்றா? ஹர்பஜன் சிங் கேள்வி

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே புஜாரா நீக்கப்பட்டதற்கு அவர் பலிஆடாக மாற்றப்பட்டிருக்கிறார் என்று கவாஸ்கர் குற்றச்சாட்டை தெரிவித்தார்.

இந்த நிலையில் ஹர்பஜன்சிங் புஜராவுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புஜாரா இல்லாதது எனக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

நிச்சயம் இது கவலை அளிக்கும் விஷயம். அவர் இந்திய அணியின் பெரிய வீரராக விளங்கினார். புஜாராவுக்கு ஓய்வு தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் நீக்கப்படவில்லை என நானே என்னை தேற்றிக்கொள்கிறேன். 

மாப்பு மாட்டிக்கிட்டியே... வசமாக சிக்கிய கோலி.. கோத்து விட்ட விமர்சகர்கள்

ஏனென்றால் இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா முதுகெலும்பு போல் விளங்குகிறார். இதனால் புஜாராவை மற்றும் நீங்கள் நீக்கினால் மற்ற பேட்ஸ்மேன்களின் சராசரி குறித்தும் கேள்விகள் எழும். ஏனென்றால் அவர்களுடைய சராசரியும் சிறப்பாக இல்லை.

அணியில் நீடிக்க வேண்டுமென்றால் அனைவருக்கும் ஒரே மாதிரியான பென்ஞ்ச் மார்க் கொடுத்து இருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் சரி அதனை எட்ட முடியவில்லை என்றால் நீக்கப்பட்டு இருக்க வேண்டும். 

ஆனால் புஜாராவை நீங்கள் முக்கிய வீரராக கருதவில்லை என்றால் அணியில் இருக்கும் மற்ற வீரர்களும் முக்கியமான வீரர்களாக இருக்க முடியாது. இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்ற போதெல்லாம் புஜாரா அணிக்காக உழைத்திருக்கிறார்.

அணியிலிருந்து நீக்கப்பட்ட புஜாரா செய்த காரியம்.. தந்தை வெளியிட்ட தகவல்!

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புஜாரா சரியாக விளையாடவில்லை என்பது உண்மைதான். ஆனால் மற்ற வீரர்களையும் நீங்கள் பாருங்கள். அனைவரும் ஒரே மாதிரி தானே ரன்கள் அடித்திருக்கிறார்கள். 

அப்படி இருக்க புஜாராவை மட்டும் குறி வைத்து நீக்குவது என்பது சரியாகுமா என்று ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பி உள்ளார். புஜாரா ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது நீக்கப்பட்டார். எனினும் கவுண்டி கிரிக்கெட்டில் புஜாரா சிறப்பாக விளையாடியது எடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!