மாப்பு மாட்டிக்கிட்டியே... வசமாக சிக்கிய கோலி.. கோத்து விட்ட விமர்சகர்கள்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா நீக்கப்பட்ட சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்து இருக்கிறது. பலரும் இந்திய அணியின் ஒட்டுமொத்த டாப் வரிசை வீரர்களும் ரன்கள் சேர்க்க தடுமாறும் நிலையில் புஜாரா மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா நீக்கப்பட்ட சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்து இருக்கிறது. பலரும் இந்திய அணியின் ஒட்டுமொத்த டாப் வரிசை வீரர்களும் ரன்கள் சேர்க்க தடுமாறும் நிலையில் புஜாரா மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதில் கவாஸ்கர், புஜாராவுக்கு அதிக அளவில் சமூக வலைத்தளத்தில் ரசிகர் இல்லாததால் அவரை மட்டும் நீக்கிவிட்டீர்களா என கேள்வி எழுப்பினார். ஒட்டுமொட்டு பேட்ஸ்மேன்களும் ஒரே மாதிரி தான் விளையாடி வருகிறார்கள்.
ஆனால் புஜாராவை மட்டும் நீக்கியது ஏன் என ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பினார்கள்.இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து கணக்கில் எடுத்துக் கொண்டால் யார் அதிக ரன்கள் எடுத்திருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
அணியிலிருந்து நீக்கப்பட்ட புஜாரா செய்த காரியம்.. தந்தை வெளியிட்ட தகவல்!
இதில் ரோகித் சர்மாவின் சராசரி மட்டும்தான் 40க்கு மேல் இருக்கிறது. அதன் பிறகு மற்ற அனைவரின் சராசரியும் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.
இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ரசிகர்களால் கிங் எனப் போற்றப்படும் விராட் கோலி 2020 ஆம் ஆண்டில் இருந்து கணக்கில் எடுத்துக் கொண்டால் அவருடைய சராசரி 29.69 என்று அளவில் தான் இருக்கிறது.
இதேபோன்று புஜாராவின் சராசரியும் அதே ஆண்டிலிருந்து கணக்கில் எடுத்துக் கொண்டால் அதை 29.69 என்ற அளவில் தான் இருக்கிறது.
இருவரும் ஒரே மாதிரி தான் செயல்பட்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஏன் இடம்பெற்று இருக்கிறார் என்று கேள்வியும் எழுந்துள்ளது.
இதேபோன்று 2021- 23 சைக்கிளில் இரண்டு ஆண்டுகளில் புஜாரா 928 ரன்கள் அடித்திருக்கிறார். சராசரி 32 என்ற அளவில் இருக்கிறது. இதே காலகட்டத்தில் விராட் கோலி புஜாராவை விட நான்கு ரன்கள் தான் அதிகம் அடித்திருக்கிறார்.
சராசரி 32.13 என்ற அளவில் இருக்கிறது. கிட்டத்தட்ட இருவரும் ஒரே மாதிரி தான் விளையாடி இருக்கிறார்கள். ஆனால் புஜாராவுக்கு மட்டும் ஏன் இந்த அநியாயம் நடந்திருக்கிறது என்ற பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
விராட் கோலிக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று காரணத்தினால் அவரை மட்டும் டெஸ்ட் அணியில் வைத்திருப்பது நியாயமா என்று விமர்சிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் தற்போது விராட் கோலி மீது அனைவரின் கவனமும் திரும்பி இருக்கிறது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விராட் கோலி சதம் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.