வேலை தருவதாகக் கூறி ஆட்கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

பெப்ரவரி 7, 2023 - 17:49
வேலை தருவதாகக் கூறி ஆட்கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சந்தேக நபர் சுற்றுலா விசாவில் லாவோஸுக்கு அழைத்துச்சென்று அவர்களை நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர் ஒரு நபரிடம் இருந்து சுமார் 19 இலட்சம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தச் சுற்றிவளைப்பில் சம்பந்தப்பட்ட மற்றுமொரு நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் நேற்று (06) ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், தற்போது லாவோஸில் சிக்கியுள்ள இலங்கையர்களை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருமாறு சந்தேக நபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!