உயர்தரப் பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இந்த முன்மொழிவு பரீட்சை திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இந்த முன்மொழிவு பரீட்சை திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி டிசெம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன முன்னதாக கூறியிருந்தார்.