தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு கொலை: இரத்மலானை, மொரட்டுவ உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கைது
இவர்கள் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், இரத்மலானை, பொரலஸ்கமுவ மற்றும் மொரட்டுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்திற்குரிய 5 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், இரத்மலானை, பொரலஸ்கமுவ மற்றும் மொரட்டுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கொலைக் குற்றத்திற்கு உதவியமைத்தல், சதித் திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.