அழகிப் போட்டி நிகழ்ச்சி மேடையில் மயங்கி விழுந்த விஷால்

முதலுதவி சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி விஷால் தெளிவடைந்தார். இந்த சம்பவத்தால் அங்கு சற்று நேரம் பரபரப்பு  ஏற்பட்டது.

மே 12, 2025 - 11:09
அழகிப் போட்டி நிகழ்ச்சி மேடையில் மயங்கி விழுந்த விஷால்

விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற திருநங்கைகளுக்கான “மிஸ் திருநங்கை 2025” அழகிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால், மேடையில் திடீரென அவர் மயங்கி விழுந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இருப்பினும் முதலுதவி சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி விஷால் தெளிவடைந்தார். இந்த சம்பவத்தால் அங்கு சற்று நேரம் பரபரப்பு  ஏற்பட்டது.

ஏற்கனவே, கடந்த ஜனவரியில் மதகஜராஜா பட புரொமோஷனில் விஷால் கை நடுங்க பேசியது வைரலான நிலையில், தற்போது அவரின் உடல்நலம் குறித்து பலரும் கவலை தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது அவர் மயக்கமடைந்த சம்பவம் ரசிகர்களை மேலும் கவலையடையச் செய்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!