தங்கநகை வாங்குவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியாக கடும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை தங்கநகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியாக கடும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை தங்கநகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கடந்த வார தங்க விலையுடன் ஒப்பிடும் போது தங்கத்தின் விலை அதிகரித்துச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தங்க நிலவரம்
தங்கம் 1 அவுன்ஸ் 650,066.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 183,450.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,250.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,600.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.