போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 458 பேர் கைது
இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பாதுபாப்பு தரப்பினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் ஜூலை 22 அன்று போதைப்பொருள் தொடர்பான மற்றும் குற்றச் செயல்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் போது 458 நபர்களை கைது செய்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுதெரிவித்துள்ளது.
இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பாதுபாப்பு தரப்பினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, ஐஸ், ஹெராயின் கஞ்சா உள்ளிட்ட கணிசமான அளவு சட்டவிரோதப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.