எரிபொருள் விநியோகம் குறித்து விசேட அறிவிப்பு

இந்த நிலையில் பெட்ரோல் ஏற்றி வரும் கப்பலொன்று எதிர்வரும் 24ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

ஜுன் 21, 2022 - 18:32
எரிபொருள் விநியோகம் குறித்து விசேட அறிவிப்பு

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் எரிபொருள் இல்லாமல், எரிபொருள் வரிசையில் காத்திருந்து பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். 

இந்த நிலையில் பெட்ரோல் ஏற்றி வரும் கப்பலொன்று எதிர்வரும் 24ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. 

இந்த கப்பலில் 35,000 மெட்ரிக் டன் பெட்ரோலை ஏற்றி வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கைக்கு  மற்றுமொரு  எண்ணெய் கப்பல் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னரான நாட்களில் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!