மீண்டும் திறக்கப்பட்ட பாலி பல்கலைக்கழகம்
மூடப்பட்ட பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் இன்று (27) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதாக பேராசிரியர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்தார்.

மூடப்பட்ட பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் இன்று (27) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதாக பேராசிரியர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்தார்.
அதன்படி முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான விடுதி வசதி இன்று செய்துகொடுக்கப்படுவதுடன், மார்ச் 03ம் திகதி நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு விடுதி வசதி செய்துகொடுக்கப்படும் என, அவர் கூறியுள்ளார்.
ஏனைய மாணவர்களுக்கு ஜூன் 05ம் திகதியிலிருந்து விடுதியும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.