சுற்றிவளைக்கப்பட்ட முகநூல் களியாட்டம்; 08 பேர் கைது
முகநூல் களியாட்டம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு போதைப்பொருள்கள் வைத்திருந்த 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகநூல் களியாட்டம்
வெலிகம கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் களியாட்டம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு போதைப்பொருள்கள் வைத்திருந்த 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (27) அதிகாலை இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்ட வெலிகம, ரணல, திஸ்ஸமஹாராமய, கனங்கே, தெலிஜ்ஜவில, வன்சாவல மற்றும் பெலியத்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.