இலங்கையில் முடிவுக்கு வரவுள்ள சமையல் எரிவாயு வரிசைகள்
இம்மாதம் 33,000 மெற்றிக் டன் எரிவாயு இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடுத்த வாரம் முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஒகஸ்ட் மாத தொடக்கத்தில் எரிவாயு வரிசைகள் நிறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாதம் 33,000 மெற்றிக் டன் எரிவாயு இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னல், இந்த மாதத்தின் முதல் வார இறுதியில் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தைத் தொடங்க நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.