இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மரணம் குறித்து விளக்கம்
குறித்த இரண்டு அதிகாரிகளும் போக்குவரத்து கட்டுப்பாட்டு கடமைகளில் ஈடுபட்டிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் மாரடைப்பினாலும் மற்றையவர் வாகன விபத்தில் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ தலதா மாளிகையில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை என கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை மற்றும் கடுகன்னாவ பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய இரண்டு அதிகாரிகள் உயிரிழந்துள்ளதுடன், ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரை கடமைகளில் அவர்கள் நேரடியாக ஈடுபடவில்லை எனவும் கூறியுள்ளனர்.
குறித்த இரண்டு அதிகாரிகளும் போக்குவரத்து கட்டுப்பாட்டு கடமைகளில் ஈடுபட்டிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் மாரடைப்பினாலும் மற்றையவர் வாகன விபத்தில் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையின் கடமைகளுக்கு நியமிக்கப்பட்ட விசேட உத்தியோகத்தர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தியோகத்தர்கள் ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கு போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் கடமையாற்றியவர்கள் எனவும் கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.