அமைப்பாளர் பதவியில் இருந்து வடிவேல் சுரேஷ் நீக்கம்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், கட்சியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் 28, 2023 - 21:03
அமைப்பாளர் பதவியில் இருந்து வடிவேல் சுரேஷ் நீக்கம்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், கட்சியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

2024 வரவு- செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த குற்றச்சாட்டின் பேரில், வடிவேல் சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார். 

இதனையடுத்து, அக்கட்சியின் அமைப்பாளராக லெட்சுமணன் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து நியமனக் கடிதத்தை லெட்சுமணன் சஞ்சய்  பெற்றுக்கொண்டார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!