தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (10) திங்கட்கிழமை சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த சில தினங்களாக இலங்கையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருவதுடன், இன்று (10) திங்கட்கிழமை தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 857,150 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,240 ரூபாயாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுணொன்று 241,900 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 27,720 ரூபாயாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 221,800 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,460 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 211,700 ரூபாயாக பதிவாகியுள்ளது.