'ஜனாதிபதியுடன் எவ்வித முரண்பாடுகளும் இல்லை'

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜுன் 20, 2023 - 14:40
ஜுன் 20, 2023 - 14:56
'ஜனாதிபதியுடன் எவ்வித முரண்பாடுகளும் இல்லை'

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருப்பதாக அங்கீகரிக்கப்படாத சில ஊடகங்கள் மூலம் அரசியல்வாதிகள் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று(19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அண்மைய காலமாக அங்கீகரிக்கப்படாத ஊடகங்கள் எமது கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமல்லாது ஜனாதிபதி சம்பந்தமாகவும் பல்வேறு செய்திகள வெளியிட்டு வருகின்றன.

அந்த செய்திகளில் கூறப்படுவது போல், எமது கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை.

பொதுஜன பெரமுனவின் நாங்கள் இணைந்தே தற்போதைய ஜனாதிபதியை பதவிக்கு கொண்டு வந்தோம். அந்த நேரத்தில் கட்சி என்ற வகையில் தீர்மானத்தை எடுத்தோம். நாடு பாதாளத்திற்குள் விழுந்து கிடந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாத்திரமே பிராந்தியத்தில் ஜனநாயகத்தை பாதுகாத்த நாடுகள் எனவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!