சமயலறையில் இருந்த பெண் மண்சரிவில் சிக்கி பலி

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று(3) அதிகாலை பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒக்டோபர் 3, 2022 - 15:34
ஒக்டோபர் 3, 2022 - 15:35
சமயலறையில் இருந்த பெண் மண்சரிவில் சிக்கி பலி

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று(3)  அதிகாலை பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி  பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 46 வயதுடைய ராமசாமி காளியம்மா என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

திடீரென இடிந்த சுவர் 

குறித்த பெண் வீட்டில் சமயலறையில் தனது மகளுடன் இருந்த வேளையில் திடீரென சுவர் இடிந்து அந்தப் பெண் மேல் விழுந்ததனால் உயிரிழந்துள்ளதாக திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். 

எனினும் குறித்த பெண்ணின் மகள் உயிர் தப்பியுள்ளதாக அவர்கள் கூறினர்.

பிரேத பரிசோதனை

பெண்ணின் சடலம் தற்போது கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

மலையகத்தில் தற்போது சீரற்ற காலநிலை நிலவுவதனால் மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். (News21)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!