அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும் - சஜித்
நாட்டின் நிர்வாகத்தை சரியான முறையில் முன்னெடுக்க முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் நிர்வாகத்தை சரியான முறையில் முன்னெடுக்க முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று (27) கருத்து தெரிவித்த அவர், மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடியாவிட்டால் அரசாங்கம் உடனடியாக வெளியேற வேண்டும் என குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் பதவி விலகினால், ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட திறமையான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு நாடு மீண்டும் கட்டியெழுப்பப்படும்.
கோடிக்கணக்கான மக்களின் ஜனநாயகக் கருத்து அடுத்த ஐந்தாண்டுகளில் இருக்கும் நிலைக்கு மீண்டும் கொண்டு வரப்படும். மோசடிக்கும் ஊழலுக்கும் இடமில்லை” என்று அவர் மேலும் கூறினார்.
புதிய பிரதமரை நியமித்ததன் மூலம் அரசாங்கத்தின் பொய்கள் தற்போது மக்களுக்கு அம்பலமாகியுள்ளதாக கூறிய பிரேமதாச, மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஐந்து முதல் 10 மாதங்களில் ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்று காட்டுவதற்காக விளையாடுவதை நிறுத்தவும், நாட்டின் இழந்த கண்ணியத்தை மீட்டெடுக்க பொதுமக்களின் கருத்துகளைக் கேட்கவும் அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.