24 இலங்கையர்கள் குவைத்தில் கைது – வெளியான தகவல்
குவைத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

24 இலங்கையர்களை குவைத் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் தனது X சமூக வலைத்தளத்தில் பதிவொன்றினை இட்டு இதனை தெரிவித்துள்ளார்.
குவைத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்களும் உள்ளடங்குவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து குவைத் தூதரகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.