ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் சேவைகள்
ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் விசேட ரயில் சேவைகளை நடத்துவதற்கு இலங்கை ரயில்வே தீர்மானித்துள்ளது.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் விசேட ரயில் சேவைகளை நடத்துவதற்கு இலங்கை ரயில்வே தீர்மானித்துள்ளது.
தைப்பொங்கல் பண்டிகை, சுதந்திர தினம் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் நீண்ட வார இறுதி நாட்களை முன்னிட்டு இந்த சிறப்பு ரயில் சேவை அமுல்படுத்தப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு - கோட்டையிலிருந்து பதுளை வரையும், கொழும்பு - கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையும் விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
சிறப்பு ரயில் சேவை விவரம்
கொழும்பு-கோட்டை முதல் பதுளை வரை: இரவு 07.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பம்.
திகதிகள்: ஜனவரி 10, 12, 14, 17, 19, 24, 26 மற்றும் 31, பிப்ரவரி 02 மற்றும் 04
பதுளை முதல் கொழும்பு வரை: மாலை 05.40 மணிக்கு பதுளையிலிருந்து ஆரம்பம்.
திகதிகள்: ஜனவரி 10, 12, 14, 17, 19, 24, 26 மற்றும் 31, பிப்ரவரி 02 மற்றும் 04
கொழும்பு - கோட்டை முதல் காங்கேசன்துறை வரை: காலை 05.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பம்
பிற்பகல் 01.50 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து ஆரம்பம்.
திகதிகள்: ஜனவரி 10, 13, 14, 15, 17, 20, 24, 27 மற்றும் 31, பிப்ரவரி 03 மற்றும் 04.