யாழ்ப்பாணம் உட்பட 13 மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடும் வறட்சி காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு, வடக்கு, ஊவா மற்றும் தெற்கு ஆகிய ஆறு மாகாணங்களில் 51641 குடும்பங்களைச் சேர்ந்த 171781 பேர் கடும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடும் வறட்சி காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
வடமாகாணத்தில் 23,568 குடும்பங்களைச் சேர்ந்த 75,165 பேரும், கிழக்கு மாகாணத்தில் 18,951 குடும்பங்களைச் சேர்ந்த 63,136 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
குடிநீர் பற்றாக்குறை, வறண்ட வானிலை போன்ற பிரச்சனைகளால் இம்மக்கள் அவதிப்படுகின்றனர். கடும் வறட்சி காரணமாக 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தின் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, சாவகச்சேரி, மருதங்கேணி, சங்கானை ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளில் 21999 குடும்பங்களைச் சேர்ந்த 70238 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.