தவிசாளர் பதவியில் இருந்து சரத் பொன்சேகா இராஜினாமா
2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக பொன்சேகா கடந்த திங்கட்கிழமை (05)கட்டுப்பணம் செலுத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல தெரிவித்துள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக பொன்சேகா கடந்த திங்கட்கிழமை (05)கட்டுப்பணம் செலுத்தினார்.
அத்துடன், ஜூலை 25 அன்று, பொன்சேகா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்,
"என்னை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு நிறைய பேர் கேட்டுள்ளனர், இலங்கை மக்களின் அழைப்பை ஏற்று ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று அவர் கூறி இருந்தார்.