சிறைச்சாலை திணைக்களத்தின் முக்கிய பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

அவர், தனது பதவி விலகல் கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜுன் 12, 2025 - 14:55
ஜுன் 12, 2025 - 15:04
சிறைச்சாலை திணைக்களத்தின் முக்கிய பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், காமினி பி. திசாநாயக்க, தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர், தனது பதவி விலகல் கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சிறைச்சாலைகள் திணைக்களத்தை மறுசீரமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன், நாடு முழுவதும் சிறைச்சாலை கண்காணிப்பாளர்களின் பதவிகளில் பல மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!