புளியம்பொக்கனை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

புளியம்பொக்கனை பகுதியில் கடந்த 1ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைப்பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புளியம்பொக்கனை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

புளியம்பொக்கனை பகுதியில் கடந்த 1ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைப்பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுண்டிக்குளம் கல்லாறு பகுதியிலிருந்து 3 பேர் மோட்டார் சைக்கிளில் புளியம்பொக்கனை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், அவர்களில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் பவி ராஜ்  ஒருவர் நேற்று (02) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மேலதிக விசாரணைகளை புளியம்பொக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.