2022 O/L பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

2022 O/L பரீட்சை
2022ஆம் ஆண்டுக்கான சாதாரணத் தரப் பரீட்சைகள் 2023 ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2021 க.பொ.த சா/த பரீட்சையில் 74 சதவீதமானவர்கள் சித்தியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டு O/L பரீட்சைக்கு வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டாலும், இந்தியக் கடன் திட்டத்தின் மூலம் தனியார் துறையின் உதவியுடன் இந்தப் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.