கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ.5,000 போஷாக்கு கொடுப்பனவு நாளை முதல்
கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதையும், அவர்களின் நலனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்காக வழங்கப்படவுள்ள 5,000 ரூபாய் போஷாக்குக் கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கைகள் நாளை செவ்வாய்க்கிழமை (16) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் உத்தியோகப்பூர்வ ஆரம்ப நிகழ்வு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் நாளை காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.
2025 நவம்பர் 30 ஆம் திகதி வரை மகப்பேறு சிகிச்சை நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, இந்த போஷாக்குக் கொடுப்பனவு ஒருமுறை மட்டுமே வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதையும், அவர்களின் நலனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.