60 ஆண்டுகள் கடந்து முதல் முறையாக லோகோவை மாற்றிய நோக்கியா

60 ஆண்டுகளில் நோக்கியா நிறுவனம் முதன்முறையாக தனது பிராண்ட் அடையாளமான லோகோ புதிய வடிவில் மாற்றி (ஞாயிற்றுக்கிழமை ) அறிவித்துள்ளது. 

பெப்ரவரி 27, 2023 - 19:48
பெப்ரவரி 27, 2023 - 19:51
60 ஆண்டுகள் கடந்து முதல் முறையாக லோகோவை மாற்றிய நோக்கியா

60 ஆண்டுகளில் நோக்கியா நிறுவனம் முதன்முறையாக தனது பிராண்ட் அடையாளமான லோகோ புதிய வடிவில் மாற்றி (ஞாயிற்றுக்கிழமை ) அறிவித்துள்ளது. 

80, 90களில் பிறந்தவர்கள் நோக்கியா செல்போன் பயன்படுத்தாதவர்களாக இருக்க முடியாது. அதன் தனித்துவமான அடையாளமாக விளங்குவது அதன் லோகோவாகும். போன் ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்யும் போது இருவர் கைகளை இணைக்கும் வகையான யோசனை நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், அடுத்தக் கட்ட வளர்ச்சி மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் நிறுவனம் தனது லோகோவை ‘NOKIA’ என்கிற வார்த்தையை குறிக்கும் வகையில் 5 வெவ்வேறு வடிவங்களைக் கொண்டு உருவாக்கியுள்ளது. 

அதன் பிரத்யேக நீல நிறத்தையும் மாற்றியுள்ளது. தற்போது ஒரு வணிக தொழில்நுட்ப நிறுவனமாக செயல்படுவதாக தலைமை நிர்வாக அதிகாரி பெக்கா லண்ட்மார்க் தெரிவித்தார்.

பார்சிலோனாவில் திங்கள் தொடங்கி மார்ச் 2 வரை வருடாந்திர மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக நிறுவனம் பிசினஸ் அப்டேட் குறித்து தெரிவித்தது.

ரீசெட், அக்ஸலரேட் மற்றும் ஸ்கெல் ஆகிய மூன்று தந்திரங்களை பெக்கா லண்ட்மார்க் செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். இதில் ரீசெட் நிலை முடிவடைந்துவிட்ட நிலையில், இரண்டாம் நிலையை தொடங்கப்போவதாக பெக்கா கூறினார். 

கடந்தாண்டு நிறுவனம் 21% வளர்ச்சி பெற்றது. தற்போது 8% அல்லது 2 பில்லியன் யூரோக்கள் (2.11 பில்லியன்) டாலர் விற்பனையில் உள்ளது. இதை இரு மடங்காக்க கவனம் செலுத்துகிறோம் என்று லண்ட்மார்க் கூறினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!