முத்து சப்பரத்தில் கில்மிஷாவை தூக்கி வந்த மக்கள்: யாழில் பிரம்மாண்ட வரவேற்பு
சரிகமப இசை நிகழ்ச்சியில் கில்மிஷா இறுதிப் போட்டிக்கு தெரிவாகி, வெற்றியும் பெற்றிருந்தார்.

பிரபல தென்னிந்திய தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட இசைப்போட்டி நிகழ்ச்சில் வெற்றிபெற்று நாடு திரும்பியுள்ள கில்மிஷாவுக்கு யாழ்ப்பாணத்தில் இன்று (28) பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
சரிகமப இசை நிகழ்ச்சியில் கில்மிஷா இறுதிப் போட்டிக்கு தெரிவாகி, வெற்றியும் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் கில்மிஷா நாடு திரும்பியிருந்ததுடன், அவரை வரவேற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சரிகமப நிகழ்ச்சியில் மகுடம் சூடினார் கில்மிஷா
நாடு திரும்பிய கில்மிஷா, பலாலி விமான நிலையத்தில் இருந்து தமிழ் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் பேரணியாக அழைத்து வரப்பட்டார்.
யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் கில்மிஷாவை வரவேற்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் திரண்டு ஆதரவு தெரிவித்ததுடன், முத்து சப்பரத்தில் கில்மிஷாவை ஏற்றி தூக்கி சென்றனர்.
அத்துடன், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திறந்த காரில் புறப்பட்ட கில்மிஷாவை மக்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.