தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயர்வு

சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  நேற்று (11) கையொப்பமிட்டுள்ளார்.

செப்டெம்பர் 12, 2024 - 10:31
தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயர்வு

தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாயாக மாற்றும் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  நேற்று (11) கையொப்பமிட்டுள்ளார்.

இதன் படி, தொழிலார்களின் எதிர்கால வைப்பு நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் பணிக்கொடைக்கான கொடுப்பனவுகளை வைப்பிலிடும்போது இது குறைந்தபட்ச சம்பளமாக கருதப்பட வேண்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, தனியார் துறையினர் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் தமது ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்த சம்பளமாக 17,500 ரூபா மற்றும் 3,500 ரூபாய் கொடுப்பனவுகள் உட்பட 21,000 ரூபாயை வழங்க வேண்டும். 

புதிய குறைந்தபட்ச சம்பளமானது தொழிலாளர்களின் எதிர்கால வைப்பு நிதி, ஊழியர் அறக்கட்டளை மற்றும் பணிக்கொடைக்கான கொடுப்பனவுகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!