2023 உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் 4 அணிகள் எது? சேவாக் கூறிய ஆருடம்
2023 உலகக்கோப்பை: இந்த உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவிப்பார் என நான் நம்புகிறேன். உலகக்கோப்பையை கைப்பற்ற விராட் கோலி பெருமளவு முயற்சி செய்வார்.

2023 உலகக்கோப்பை: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. இதில் 10 அணிகள் ஒரே குரூப்பாக விளையாடுகிறார்கள். ஒவ்வொரு அணிகளும் ஒன்பது லீக் ஆட்டங்களில் விளையாடுகிறது.
இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும். இந்த போட்டி இந்தியாவில் உள்ள சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட மைதானங்களில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் இந்த தொடரில் அரையிறுதி சுற்றுக்கு செல்ல போகும் அணி எது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவிப்பார் என நான் நம்புகிறேன். உலகக்கோப்பையை கைப்பற்ற விராட் கோலி பெருமளவு முயற்சி செய்வார்.
உலகின் நம்பர் 1 வீரர் பாபர் அசாம் தரையில் படுத்த நெகிழ்ச்சி காட்சி
அனைவரும் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தை தான் எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் அன்று யார் வெற்றி பெறுவார்கள் என்று என்னால் இப்போது சொல்ல முடியாது.
எந்த அணி அழுத்தத்தை சிறப்பாக கையாள்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாக இருப்பார்கள். என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானை விட அழுத்தத்தை கையாள்வதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது.
ஆரம்ப காலத்தில் எல்லாம் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படுவார்கள். ஆனால் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி அழுத்தத்தை கையாள்வதில் கைதேர்ந்து விட்டது. இப்போது யார் வெற்றி பெறுவார்கள் என்று கூறுவது சரியாக இருக்காது.
இந்தியா 12 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது சொந்த மண்ணில் விளையாடுகிறார்கள். இதனால் மைதானங்கள் எப்படி செயல்படும் என்று இந்திய வீரர்களுக்கு நன்றாகவே தெரியும்.
என்னை கேட்டால் அரை இறுதிக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா , பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெறும் என்று சேவாக் கூறியுள்ளார். சேவாக்கின் இந்த கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் இடம்பெறுவது சந்தேகமாக இருப்பதாகவும் தென்னாப்பிரிக்க அணியின் பலமும் முன்பு போல் இல்லை என்பதாலும் சேவாக் சொன்ன நான்கு அணிகள் அரையிறுதிக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.