கோட்டாபயவின் வருகை தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எப்போது நாடு திரும்புவார் என்பது குறித்து இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 7, 2022 - 20:39
கோட்டாபயவின் வருகை தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எப்போது நாடு திரும்புவார் என்பது குறித்து இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஏன் நாட்டை விட்டு வெளியேறினார் என்றும் அவர் நாட்டை விட்டு ஓடி விட்டார் எனவும் மக்கள் மத்தியில் பரவலான கருத்து இருந்து வருகிறது இதில் உங்கள் நிலைப்பாடு என்ன என ஊடகவியலார் ஒருவர் கேள்வியெழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளிக்கையில், ஓடிப்போனதாக மக்களே குற்றம் சாட்டுகின்றனர், யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம், அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள். கோட்டாபய வைத்திய பரிசோதனைக்காகவே சிங்கப்பூர் சென்றுள்ளார் என தெரிவித்தார்.

இருப்பினும், எதிர்வரும் 11ம் திகதி கோட்டாபய நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலும் தனக்கு கோட்டாபயவின் வருகை குறித்து எதுவும் அறிவிக்க படவில்லை எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கோட்டாபயவுக்கு சிங்கப்பூர் அரசு வழங்கிய பயண அனுமதி சீட்டு எதிர்வரும் 11ம் திகதியுடன் முடியடைகின்ற தருவாயில் அதை மீளவும் 14நாட்கள் நீடித்து கோட்டாபயவை சிங்கப்பூரில் தங்க அனுமதிக்குமாறு இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!