அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

கோதுமை மா மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மே 8, 2023 - 13:41
மே 8, 2023 - 13:42
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

கோதுமை மா மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை 10 ரூபாயினாலும், சீனி ஒரு கிலோகிராமின் விலை 25 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவிற்கான இறக்குமதி வரி விலக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் திரும்ப பெறப்பட்டதையடுத்து, கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலக சந்தையில் வெள்ளை சீனி மெட்ரிக் டொன் ஒன்றின் விலையானது 500 அமெரிக்க டொலரில் இருந்து 750 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!