அனுமதியின்றி எனது பெயர், படத்தை பயன்படுத்துகின்றனர்: சந்திரிகா கடிதம்

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றையும் எழுதியுள்ளார்.

ஏப்ரல் 28, 2025 - 17:31
ஏப்ரல் 28, 2025 - 17:32
அனுமதியின்றி எனது பெயர், படத்தை பயன்படுத்துகின்றனர்: சந்திரிகா கடிதம்

2025 உள்ளுராட்சி தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் தனது படத்தையும் பெயரையும் மக்கள் கூட்டணி சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றையும் எழுதியுள்ளார்.

மக்கள் முன்னணி என்ற கட்சி தனது தேர்தல் பிரசாரத்தின் போது சுவரொட்டிகள் மற்றும் துண்டுபிரசுரங்களில் தனது படத்தினை பெயரை பயன்படுத்துவதாக தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்தக் கட்சி அத்தனகல பிரதேச சபையில் கதிரை சின்னத்தில் போட்டியிடுவதுடன், தனக்கு அந்த கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், தனது பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனவே, இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!