ஆஸ்திரேலியா செய்த மோசடி.. கொதித்து எழுந்த இங்கிலாந்து ரசிகர்கள்

எப்போதும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதன்படி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு சர்ச்சையான சம்பவம் நடைபெற்றது.

ஜுலை 3, 2023 - 13:04
ஆஸ்திரேலியா செய்த மோசடி.. கொதித்து எழுந்த இங்கிலாந்து ரசிகர்கள்

ஆஷஸ் கிரிக்கெட்டில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி செய்த மோசடி கிரிக்கெட் ரசிகர்களை ஆத்திரம் அடைய செய்திருக்கிறது. 

எப்போதும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதன்படி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு சர்ச்சையான சம்பவம் நடைபெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்துக்கு 371 வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. 114 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து அணி ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 

50 ரன்கள் என்ற ஸ்கோருடன் பென் டக்கட் விளையாடி ஆட்டத்தில் மேலும் 33 ரன்கள் சேர்த்து 83 ரன்களில் வெளியேறினார்.

இதில் எடுத்து ஸ்டோக்ஸ் ஜானி பாரிஸ்டோ இணைந்து பொறுப்பான ஆட்டத்தை விளையாடி வந்தனர். அப்போது ஆட்டத்தின் 51 வது ஓவரின் கடைசி பந்து பரிஸ்டோவுக்கு ஷார்ட் பால் வீசப்பட்டது. 

அதனை பாரிஸ்டோ குனிந்து விட்டதால் பந்து விக்கெட் கீப்பிரிடம் சென்றது. பாரிஸ்டோ அந்த பந்து முடிந்து விட்டது என நினைத்து எப்போதும் போல் கிரிசை விட்டு வெளியே வந்தார்.

ஆனால் பாரிஸ்டோ வெளியே வந்ததும் அலெக்ஸ் கேரி ஸ்டம்பில் பந்தை அடித்து ரன் அவுட் செய்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் நடுவரிடம் இதற்கு அவுட் கேட்டார்கள். 

எங்களுக்கு இதுபோன்ற வெற்றி தேவையில்லை.. பென் ஸ்டோக்ஸ் தரமான பதிலடி!

ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த பாரிஸ்டோ அப்படியே நின்றார். இதனையடுத்து மூன்றாம் நடுவரின் முடிவுக்கு இது கொண்டு செல்லப்பட்டது. அவர் பாரிஸ்டோ விட்டு வெளியே சென்றதால் இது அவுட் என அறிவித்தார்.

இது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால் 193 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆறு விக்கெட்டுகளை இழந்தது. பொதுவாக எந்த அணி வீரர்களும் இவ்வாறு ரன் அவுட் செய்ய மாட்டார்கள்.

ஆனால் ஆஸ்திரேலிய அணி குறுக்கு வழியில் மோசடி செய்து இந்த ரன் அவுட்டை நிகழ்த்தியது. இது கிரிக்கெட் விதிப்படி சரியா தவறா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.

மேலும் ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த செயலுக்கு இங்கிலாந்து ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக குரல் எழுப்பி தங்களுடைய கோபத்தை இங்கிலாந்து ரசிகர்கள் பதிவு செய்தனர்.

மேலும் ஆஸ்திரேலியா ரசிகர்கள் ட்ரெஸ்ஸிங் ரூம் செல்லும் போது அங்கு நின்று கொண்டிருந்த இங்கிலாந்தின் பாரம்பரியமிக்க எம்.சி.சி. கிளப் உறுப்பினர்கள் ஆஸ்திரேலிய வீரர்களிடம் தங்களது கோபத்தை வெளிப்படுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் மோதலில் ஈடுபட முயன்றனர்.

இதனை அடுத்து அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலர்கள் இருவரையும் தள்ளி வைத்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!