2025 இல் முதல் தொடுதிரை மேக்புக்கை வெளியிட உள்ள ஆப்பிள்

2025இல் ஆப்பிள் நிறுவனமானது அதன் முதல் தொடுதிரை மேக்புக்கை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jan 12, 2023 - 16:01
 2025 இல் முதல் தொடுதிரை மேக்புக்கை வெளியிட உள்ள ஆப்பிள்

2025இல் ஆப்பிள் நிறுவனமானது அதன் முதல் தொடுதிரை மேக்புக்கை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், அதன் மேக்புக் மடிக்கணினிகளில் தொடுதிரை அம்சத்தை சேர்ப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. 

ஆப்பிளின் பொறியாளர்கள், இந்த திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில், அதன் புதிய மேக்புக் ப்ரோவை(MacBook-Pro) அறிமுகப்படுத்தலாம், என்றும் இது ஒலெட்(OLED) தொடுதிரை அம்சம் கொண்ட ஆப்பிளின் முதல் மேக் ஆக இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் கடந்த 2010இல் ஆப்பிளின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், மேக்புக்களில் தொடுதிரை அம்சத்தை சேர்ப்பது தற்போதுள்ள பணிச்சூழலில் இலகுவானது அல்ல என்று கூறினார்.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்