வனவிலங்கு கணக்கெடுப்பு அறிக்கை நாளை வெளியிடப்படும்
வனவிலங்குகள் தொடர்பான கணக்கெடுப்பின் அடிப்படையில் வன விலங்குகளை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வனவிலங்குகள் தொடர்பான கணக்கெடுப்பின் அடிப்படையில் வன விலங்குகளை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று விவசாய அமைச்சர் லால்காந்த கூறுகிறார்.
பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் பாம்புகள், குரங்குகள், மயில்கள் மற்றும் பருந்துகள் குறித்து அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை நாளை (28) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் லால்காந்த இதனைக் கூறியுள்ளார்.