உலகின் அதிக நினைவாற்றல் கொண்ட மாணவியாக சாதனை படைத்த கனிஷிகா

உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட மாணவியாக பொகவந்தலாவையைச் சேர்ந்த 8 வயது கனிஷிகா சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

ஆகஸ்ட் 17, 2023 - 12:11
உலகின் அதிக நினைவாற்றல் கொண்ட மாணவியாக சாதனை படைத்த  கனிஷிகா

சோழன் உலக சாதனை

உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட மாணவியாக பொகவந்தலாவையைச் சேர்ந்த 8 வயது கனிஷிகா சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

பொகவந்தலாவையைச் சேர்ந்த சங்கரதாஸ் மற்றும் பாமினி தம்பதிகளின் மகள் கனிஷிகா. இவர் பொகவந்தலாவை புனித ரோசரி மகா வித்தியாலயத்தில் 2ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார். 

இவர், தன் தொடர் முயற்சியினால் மனித உடலின் 423 உள் உறுப்புகளை படத்தில் அடையாளம் காட்டியவாறு 4 நிமிடங்களில் மனப் பாடமாக ஒப்புவித்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார். 

இதன் மூலம் உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட சிறுமிகளின் வரிசையில் இடம் பிடித்தார் கனிஷிகா. 

இந்த உலக சாதனை நிகழ்வு நேற்று (16) பொகவந்தலாவை ஹொலி ரோசரி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த சோழன் உலக சாதனை முயற்சியை நடுவராக நேரில் கண்காணித்து உறுதி செய்தார் அந்த நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீநாகவானி ராஜா. 

இதன்போது சோழன் உலக சாதனை நிறுவனத்தின் பதக்கமும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சோழன் உலக சாதனை படைத்த மாணவியை பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினர்.

மாணவி கனிஷிகாவுக்கு News21.lk இணையத்தள ஆசிரியர் குழுவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!