தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்
பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சிறப்பு பஸ் சேவைகளை ஆரம்பித்துள்ளது.

தீபாவளி நீண்ட வார இறுதி இன்று (17) தொடங்கும் நிலையில், பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சிறப்பு பஸ் சேவைகளை ஆரம்பித்துள்ளது.
அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும் கொழும்பில் உள்ள பஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படும்.
குறிப்பாக ஹட்டன், வெலிமடை, பதுளை, பசறை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பாதைகளில் அதிகளவு பஸ்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன.