ஐந்தே நாட்களில் நகங்களை நீளமாக வளர வைக்க வேண்டுமா?

பொதுவாக பல பெண்கள் பலருக்கு கைவிரல் நகங்களை நீளமாக வளர்க்க அதிக ஆசை இருக்கும். ஆனால் சிலருக்கு சற்றென்று உடைந்து விடும்.

Nov 21, 2022 - 16:12
ஐந்தே நாட்களில் நகங்களை  நீளமாக வளர வைக்க வேண்டுமா?

நகங்கள் பராமரிப்பு

பொதுவாக பல பெண்கள் பலருக்கு கைவிரல் நகங்களை நீளமாக வளர்க்க அதிக ஆசை இருக்கும். ஆனால் சிலருக்கு சற்றென்று உடைந்து விடும்.

இவர்கள் ஒரு சில இயற்கை வழிகளை பின்பற்றினால் எளிய முறையில் நகங்களை வளர வைக்கலாம். அந்தவகையில் கைவிரல் நகங்களை வலுவடையச் செய்து, ஆரோக்கியமாக வளரச் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

  • வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் தூள் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் BABY WASH ஆகியவற்றை சேர்த்து நன்றாக அந்த நீரில் 5 நிமிடங்கள் நன்றாக ஊறவைக்க பின் பிரஷை பயன்படுத்தி நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் நகங்களில் உள்ள அழுக்கு நீங்கும். இதனை தினமும் அல்லது வாரத்தில் மூன்று முறை செய்யலாம்.
  •  ஒரு பூண்டு துண்டை எடுத்து அதனை தோல் உரித்து வெட்டி பூண்டினை கைவிரல் நகங்களின் மீது நன்றாக அப்ளை செய்ய வேண்டும். அதாவது நகங்களின் மேல் பகுதி மற்றும் உள்பகுதி, நகங்களின் ஓரங்களில் 20 முதல் 30 நிமிடங்கள் நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு நகங்களை குளிர்ந்த நீரால் கழுவலாம்.
  •  ஆலிவ் ஆயில் நகங்கள் வளர மிகவும் பயன்படுகிறது எனவே நகங்களில் ஆலிவ் ஆயிலை நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்து வரலாம். 
  • எலுமிச்சையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கைவிரல் நகங்களில் 20 முதல் 30 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால் நகங்கள் ஆரோக்கியமாக வளரும்.  
பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்