விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. 

டிசம்பர் 1, 2025 - 09:11
விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) விபத்துக்குள்ளானது். 

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது இந்த ஹெலிகொப்டர் கிங் ஓயாவில் வீழ்ந்தது.

இந்த விபத்தில் ஹெலிகொப்டர் இருந்த விமானப்படை வீரர்கள் இருவர் மற்றும் நிவாரணப் பணியாளர்கள் மூவர் என ஐந்து பேர் காயமடைந்தனர். 

பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து அவர்களை உடனடியாக மீட்டு, மாரவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

எனினும், பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. 

இந்த விபத்தில் காயமடைந்த ஏனையவர்கள் மாரவில வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!