ஹர்த்தாலை எதிர்த்து யாழில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

வடக்கு - கிழக்கு மாகாணங்களை முடக்கி  எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால்  ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஒக்டோபர் 18, 2023 - 15:37
ஹர்த்தாலை எதிர்த்து யாழில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

வடக்கு - கிழக்கு மாகாணங்களை முடக்கி  எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால்  ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், குறித்த ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மராட்சி பகுதிகளில் புதன்கிழமை (18)துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இந்த துண்டு பிரசுரங்களானது தென்மராட்சி மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பினால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த துண்டு பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வடக்கு கிழக்கை முடக்கி ஹர்த்தால் போடுவதன் மூலம் பாதிக்கப்படுவது யார்? இந்த ஹர்த்தால் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகும் தீர்வு என்ன?காலங்காலமாக போடப்பட்ட ஹர்த்தால் மூலம் தமிழ் மக்கள் அடைந்த இலாபம் என்ன?

தெற்கை முடக்கினால் வரவேற்கத்தக்கது ஆனால் வடக்கு கிழக்கை முடக்கி மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவது வரவேற்கத்தக்கதன்று என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பு.கஜிந்தன்

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!