படப்பிடிப்புக்காக இலங்கைக்கு வந்துள்ள மோகன்லால், குஞ்சாக்கோ போபன்
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் நடிகர் குஞ்சாக்கோ போபன் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர்.

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் நடிகர் குஞ்சாக்கோ போபன் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இந்தியாவின் எட்டு மொழிகளில் வெளியிடப்படவுள்ளன பேட்ரியாட் (Patriot) என்ற திரைப்படத்தின் மூன்று நாள் படப்பிடிப்புக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை (15) அவர்கள் வந்தடைந்தனர்.
இந்நிலையில், அவர்களை இலங்கை சுற்றுலாதுறை குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.