இறக்குமதி அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை: வர்த்தமானி வெளியீடு
புதிய விலை நிர்ணயம், அதன் தலைவரின் கையொப்பத்துடன் வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (21) முதல் அமலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.
புதிய விலை நிர்ணயம், அதன் தலைவரின் கையொப்பத்துடன் வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின் படி,
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாயாகும்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் நாட்டு அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாயாகும்.
ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாயாகும்.
ஒரு கிலோகிராம் பொன்னி சம்பாவின் அதிகபட்ச விலை ரூ. 240 ரூபாயாகும்.
ஒரு கிலோகிராம் கீரி பொன்னி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலை 255 ரூபாயாகும்.