சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இலங்கை அணி தெரிவானது

132 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி, 2023 ஐசிசி உலகக் கோப்பையின் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.

ஜுன் 26, 2023 - 09:56
சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இலங்கை அணி தெரிவானது

132 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி, 2023 ஐசிசி உலகக் கோப்பையின் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.

இலங்கையின் வெற்றியை தொடர்ந்து ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் அணிகள் குழு B இலிருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இலங்கை அணியின் சார்பில், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன 103 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் திமுத் கருணாரத்ன பெற்ற முதலாவது சதம் இதுவாகும்.

மேலும் வனிந்து ஹசரங்கவின் தொடர்ச்சியான ஐந்து விக்கெட்டுக்கள் மற்றும் திமுத் கருணாரத்னவின் சிறப்பான ஆட்டமே இலங்கை அணிக்கு வெற்றியை அளித்துள்ளது.

ஏ பிரிவில் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!