மோசமான வானிலை: இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர், 130 பேர் காணாமல் போயுள்ளனர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 123 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 123 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 09.00 மணி நிலவரப்படி, கண்டி மாவட்டத்தில்அதிகபட்சமாக 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் 35 பேர், கேகாலையில் 09 பேர், மாத்தளையில் 08 பேர், நுவரெலியாவில் 06 பேர், குருநாகலில் 03 பேர் மற்றும் மொனராகலையில் 02 பேர் உயிரிழந்துள்ளனர்.
அனுராதபுரம், யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் காலி மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட 13,690 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 43,925 பேர் 488 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.