அஸ்வெசும டிசெம்பர் கொடுப்பனவு வங்கிகளில் வைப்பு; இன்று பெறலாம்
அஸ்வெசும கொடுப்பனவு என்பது, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கும் முக்கியமான சமூக நல உதவித் திட்டமாகும்.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக உள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசெம்பர் மாதக் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை (18) முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக தகுதியான பயனாளிகள் தங்களுக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் 616,346 முதியவர்கள் இந்த நிதி உதவியைப் பெற்றிருந்ததுடன், அதற்காக அரசு 3,081,730,000 ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஒதுக்கியிருந்தது.
அஸ்வெசும கொடுப்பனவு என்பது, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கும் முக்கியமான சமூக நல உதவித் திட்டமாகும்.