ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொலிஸில் 62 முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 62 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 29, 2024 - 11:13
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொலிஸில் 62 முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 62 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதிகளவான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலானவை எனவும், பாரதூரமான சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக விசேட பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் உள்ள விசேட தேர்தல் காரியாலயத்தில் அந்த பிரிவுகளுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளை தினந்தோறும் மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் பொது பேரணிகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் ஏற்கெனவே முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!