கொள்ளை சம்பவத்தில் சிக்கிய 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் விளக்கமறியலில்!
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைதான 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் நாளை (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து 14 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் மேல் மாகாண வடக்கு புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவரும், விசேட பணியகத்தின் இரண்டு உத்தியோகத்தர்களும், புளுமெண்டல் பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர் ஒருவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.