2-வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணி பந்துவீச்சு - இந்திய அணியில் 2 மாற்றங்கள்

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

Nov 27, 2022 - 08:01
2-வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணி பந்துவீச்சு - இந்திய அணியில் 2 மாற்றங்கள்

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. 

முன்னதாக ஹாமில்டனில் பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் நிலவியதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர் 15 நிமிட தாமதத்திற்கு பிறகு டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. இந்த போட்டியில் ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக தீபக் சாஹரும், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடாவும் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளனர்.

இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியது வரும் என்பதால் முந்தைய ஆட்டத்தில் பந்து வீச்சில் இருந்த பலவீனத்தை சரிசெய்வதுடன் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட புதிய யுக்தியுடன் இந்திய அணி களம் இறங்கும்.

இந்தியா

ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்

நியூசிலாந்து

பின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன்(கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல், மாட் ஹென்றி, டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன்

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்