'வேலு யோகராஜ் தொடர்பான தீர்மானம் திங்கள் அறிவிக்கப்படும்'
தாம் பதவி நீக்கப்படவில்லை என்றும், அதற்கு முன்னதாகவே தாம் பதவி விலகிவிட்டதாகவும் வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
கந்தப்பளையில் பல கோடி ரூபா பெறுமதியான காணி ஒன்றில் இடம்பெற்ற மோசடி குறித்தும் அதில் வேலு யோகராஜ் தொடர்பு பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்படுகின்ற விடயம் தொடர்பாகவும் விபரங்கள் வெளியாக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக அவரிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழு ஒன்று விசாரணை நடத்தி, அவரை பதவி நீக்கி இருப்பதாக முன்னதாக தகவல் வெளியாகின.
ஆனால் தாம் பதவி நீக்கப்படவில்லை என்றும், அதற்கு முன்னதாகவே தாம் பதவி விலகிவிட்டதாகவும் வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இது தொடர்பாக பதில் வழங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், வேலு யோகராஜுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை பெறுபேறு திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
எனினும், அதற்குள் வேலு யோகராஜ் பதவி விலகுவதாக தமக்கு அறியப்படுத்தி இருப்பதாகவும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.